தீராத வினை தீர்க்கும் கோளறு பதிகம்
கோளறு பதிகத்தை பாராயணம் செய்தால் நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கும், ஆயுள் பலம் பெறும், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும்.
கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் ‘சஞ்சித வினை’ என்று அழைக்கப் பெறும்.
அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது ‘பிராரப்த வினை’.கிரகங்கள் துன்பங்களையோ இன்பங்களையோ புதிதாக உற்பத்தி செய்து வழங்குவதில்லை.
துன்பமோ இன்பமோ பிராரப்த வினையின் பலனாகவே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்து அடைகின்றன. இப்படிப்பட்ட துன்பங்களில் இருந்து விடுபடுவதுடன், பல நற்பலன்களையும் பெற வழிவகை செய்யும் பாடல்களை நமக்காக வழங்கி சென்றுள்ளனர் ஆன்மிக ஆன்றோர்கள்.
அப்படி பன்னிரு சைவ திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பெருமான் அருளிய தேவார பாடல்கள் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் அல்லது திருகோளறு பதிகம் என அழைக்கப்படுகிறது.
ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் புறப்பட்டார். ஆனால் அன்றைய நாள் நல்ல நாள் இல்லை, அதனால் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர், சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார். இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார்.
இந்த 11 பாடல்களை பாடினாலும், மற்றவர்கள் பாடுவதை காதினால் கேட்டாலும் தீராத வினை அனைத்தும் தீர்க்கக் கூடிய அற்புத ஆற்றல் கொண்டதாகும்.
கோளறு பதிகத்தை பாராயணம் செய்தால் நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கும், ஆயுள் பலம் பெறும், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும்.
ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி பிரதோஷ நன்னாளில் இந்த சக்தி வாய்ந்த பதிகத்தை படிப்பது மிக சரியானதாக இருக்கும்.