6-chakras in tamil

6-chakras in tamil

குண்டலினி சக்தி உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் தனது சக்திகளை கொடுத்து உடம்பில் உள்ள எல்லா இயக்கங்களையும், உணர்வுகளையும் இன்ப, துன்பங்களையும் கோப, தாபங்களையும் நிர்வாகம் செய்து உடம்பில் உஷ்ணம், குளிர்ச்சி ஆகியவற்றையும் சீராக பாதுகாத்து வருகிறது.

இதுமட்டுமல்ல, உடம்பில் உள்ள ஆயிரக்கணக்கான நாடிகளையும், குண்டலினி சக்தியே பாதுகாக்கிறது. நாடி சுத்தியின் மூலம் மேல் துருவ எழுச்சியை மேற்கொள்ளும் குண்டலினி சக்தி பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்கிறது.

குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது.

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 72000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒன்றே).

நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.

ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

Leave a comment