ஸ்ரீ கணேச காயத்ரீ


ஒம் தத்புருஷய வித்ம‌ஹே வக்ரதுண்டாய தீமஹி

தந்நோ

தந்தி ப்ரசோதயாத்


ஸ்ரீ சுப்பிரமணியர் காயத்ரீ


ஒம் தத்புருஷய வித்ம‌ஹேமஹாஸேனாய

தீமஹி

தந்நஷ்ஷண்முக ப்ரசோதயாத்


ஸ்ரீ சிவன் காயத்ரீ


ஒம் மஹா‌தேவாய வித்ம‌ஹே ருத்ரரூபாய

தீமஹி

தந்நஸ்சிவ ப்ரசோதயாத்


ஸ்ரீ பார்வதி காயத்ரீ


ஒம் மஹா‌தேவ்யை ச வித்ம‌ஹே சிவபத்னைச

தீமஹி

தந்நோ ‌கெளரீ ப்ரசோதயாத்


ஸ்ரீ பிரம்மா காயத்ரீ


ஒம் வேதாத்மநாய வித்ம‌ஹே ஹிரண்யகர்பாய

தீமஹி

தந்நோ ‌பிரம்ம ப்ரசோதயாத்


ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ


ஒம் ஜம் வாக்தேவ்யை வித்ம‌ஹே காமராக்ஞை

தீமஹி

தந்நோ ‌ தேவீ ப்ரசோதயாத்


ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ


ஒம் நாராயணாய வித்ம‌ஹே வாசுதேவாய

தீமஹி

தந்நோ ‌விஷ்ணு ப்ரசோதயாத்


ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரீ


ஒம் மஹாலக்ஷ்மீச வித்ம‌ஹே விஷ்ணுபத்னீச

தீமஹி

தந்நோ ‌லக்ஷ்மி ப்ரசோதயாத்


அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில்

திருவிடைமருதூர், கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் உள்ளது. இத்தலத்துக்கு கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர்மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான். பட்டினத்தார்,பத்திரகிரியார்,வரகுணபாண்டியன், அருணகிரிநாதர்,கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்ற பெருமையுடையது.

பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம். பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம். இத்தலத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர்.

அதுபோல் சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். இவ்வகையான பிரார்த்தனை இந்த சந்நிதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் முதலிய பெருநோய்களினின்றும், பாவங்களினின்றும் நீங்கி வேண்டும் நலன்களெல்லாம் எய்தி இன்புறுதல் இன்றும் கண்கூடு.

மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் - மயிலாடுதுறை

முன்னொரு காலத்தில் "தர்மம்' ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். இதைக் காண பிரம்மா அன்ன வாகனத்திலும், பெருமாள் கருடன் மீதும், மற்ற தேவர்கள் குதிரைகளிலும் வந்தனர். ஆனால், ரிஷபம், சிவனின் அருளால், மற்ற வாகனங்களை விட வேகமாக சிவனை சுமந்தபடி வந்தது.

இதையடுத்து, ரிஷபத்திற்கு நம்மால் தான் உலகையே ஆளும் சிவபெருமான் கூட, விரைவாக செல்ல முடிகிறது என்ற கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த சிவன்,""நந்தி! என்னால் தான் நீ பெருமையடைகிறாய் என்பதை மறக்காதே,'' என்று கூறி தன் சடைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகில் வைத்தார். அதன் பலம் தாங்காத நந்தி, மயக்கமடைந்து விழுந்தது.

இதைப்பார்த்த  சிவன் கருணை உள்ளத்துடன், ""நந்தி! என்னை குறித்து உன்னிடம் கர்வம் ஏற்பட்டு விட்டது. இந்த பாவத்தை நீக்க, பூலோகத்தில் காவிரிக்கரையில் நீயும் தவம் செய். நான் குரு வடிவாய் (தெட்சிணாமூர்த்தி) காட்சியளிப்பேன்.

நீ காவிரியில் நீராடி வில்வத்தினால் தினமும் என்னை பூஜித்தால் நன்மை உண்டாகும். அதன்பின் என்னை வந்து அடையலாம்,''என்று கூறினார். அதன்படி நந்தி, தவம் செய்ய, சிவனும் குரு வடிவாய் காட்சியளித்து, இறைவனே உயர்ந்தவன் என்ற ஞானத்தை வழங்கினார். அப்போது நந்தீஸ்வரர், ""குரு வடிவாக காட்சி தந்த சிவனே, இத்தலத்தில், தாங்கள் என்மீது அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும்.  எப்போதும் உங்கள் எதிரில் இருக்கும் பாக்கியத்தையும்  தந்தருள வேண்டும்,'' என்றார். எட்டு பாடல்களால் துதித்தார்.

நந்தியின் விருப்பத்தை ஏற்ற சிவன், ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தார். வதாரண்யேஸ்வரர் என்ற பெயரில், ஞானாம்பிகையுடன் அமர்ந்தார். அத்தலம் மயிலாடு துறையில் உள்ளது. சிவசன்னதி எதிரில் தான் நந்தியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு தெட்சிணாமூர்த்தி எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்துள்ள அரிய காட்சியைக் காண முடியும்.

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் - வைத்தீஸ்வரன் கோயில்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. தினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர். தையல் நாயகிக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மொட்டை போடுதல், காது குத்துதல், வயிற்று வலி குணமாக மாவிளக்கு போடுதல், தாலி காணிக்கை, உருவங்கள் காணிக்கை ஆகியவற்றை செய்கின்றனர். அம்பாள் சன்னதியில் உப்பு, மிளகு , கடுகு, வெள்ளி கண்ணுருக்கள் ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்துகிறார்கள். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். சித்தாமிர்த தீர்த்தம்: இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.


புள்ளிருக்கு வேளூர்: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.


நோய் தீர்க்கும் திருச்சாந்து: 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி,  பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும்.


வைத்தியநாதர் பல மாநில மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.  வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.


செவ்வாய் தோஷ நிவர்த்தி: இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.


செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.


சடாயுகுண்டம்: இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.


செல்வ முத்துக்குமாரர்: வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.  செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.


முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும். மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. நவகிரக தலங்களில் இது அங்காரக தலம் ஆகும். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி மேற்கு பார்த்த சந்நிதி. இங்கு தரப்படும் வில்வம், விபூதி, புற்றுமண் தைலம் ஆகியவற்றைக் கொண்டு தரப்படும் மருந்து வெண்குஷ்ட ரோகம் குணமாகிறது. செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது. தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர். அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.
1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.
2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .
3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.
4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.
5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் - திருக்கடையூர்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும் இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.


உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும்,புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். இருதய சம்பந்தமான நோய்கள் குறிப்பாக ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.  சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.


மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.


பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.


அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.


காலசம்ஹார மூர்த்தி: மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.


தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.


எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது,  எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.

சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, ""மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,'' என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.


தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.

சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை "சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை "உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் "சம்ஹார' மற்றும் "அனுக்கிர மூர்த்தியை' தரிசிக்கலாம்.  இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.


சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.


தீர்த்த சிறப்பு: மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.


மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.


சதாபிஷேகம்: திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.


திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது.


திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.  இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.


எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.


பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.


சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.


பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், "அமிர்தகடேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை

மயில் வடிவில் சிவன், அம்பாள்: இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, "மயூரதாண்டவம்' என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது.


இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.


சேலை கட்டிய சிவன்: நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் ஐப்பசி கடைசிகட்ட துலா ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. தம்பதியர்களுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, "முடவன் முழுக்கு' என்கின்றனர்.


அத்தம்பதியர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் "அனவித்யாம்பிகை' என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இவரது சன்னதி கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சற்றே இடப்புறம் சாய்ந்து, இடது காலை மடித்து வைத்தபடி காட்சி தருகிறார்.


ஆடிப்பூர அம்பாள்: தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால், "அபயாம்பிகை' என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். ஆடிப்பூர அம்பாள், வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள். பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, "அகத்திய சந்தன விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள்.


துலாஸ்நானம்: சிவன், இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தாராம். இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் "இடபதீர்த்தம்' எனப்படுகிறது. ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளிலும் இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாட்களில் தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். கங்கை, இங்கு நீராடிதான் தன் பாவங்களை போக்கிக்கொண்டதாம். இந்நாள் ஐப்பசி அமாவாசையாக (தீபாவளி) கருதப்படுகிறது. அன்று நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சனி சிறப்பு: இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் "ஜுவாலை சனி'யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் பார்வை குறையும் என்பது நம்பிக்கை. ஐந்து பிரகாரங்களுடன் அமைந்த தலம் இது. இங்கு கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர்.


துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு சன்னதி உண்டு. இங்குள்ள கணக்கடி விநாயகரிடம் வேண்டிக்கொண்டால் கணக்குகளை சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே, அம்பாளையும் யாகத்திற்கு செல்ல வேண்டாமென கூறிவிட்டார் சிவன். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன் படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள்.


சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், "மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் - மயிலாடுதுறை

இங்கு பெருமாள் அத்திமரத்தால் ஆனவர். இங்கு ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது கருடாழ்வார், ராமானுஜர், விஸ்வக்ஷேனர் ஆகியோரும் இங்கு அருள் பாலிக்கிறார்கள். இத்தலத்தின் அருகிலுள்ள மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலில் பிப்பலருக்கு சிலை உள்ளது.

ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன், பலிபீடம், கொடிமரம், விநாயகர், கருடாழ்வார் உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும், இடப்புறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்; நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம் திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன், கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும்.  800 ஆண்டுகள் பழமையான வான்முட்டி பெருமாள் கோயில் உள்ளது.வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் 15 அடி உயரத்திற்கு சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.

பிற்காலத்தில் இத்தலத்தின் பெருமைகளை கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மகாராஜா பெருமாளிடம்,""பகவானே! எனக்கும் யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும்,''என வேண்டிக் கொண்டார். அவருக்கும் பெருமாள் இந்த அத்தி மரத்தில் அருள்பாலித்தார். இதனால் மகிழ்ந்த மன்னர் தன்னைப் போல அனைவரும் பலனடைய அத்திமரத்தில் 15 அடி உயரத்தில் சிலை வடித்து பூஜை செய்தார்

மார்பில் மகாலட்சுமி: சீனிவாசப் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி யுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபத்தில் அமைந்திருந்ததால் "வான்முட்டி பெருமாள்' என அழைக்கின்றனர். இவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், அபிஷேம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. உற்சவமூர்த்தியாக உள்ள யோக நரசிம்மருக்கே அபிஷேகம்.

சப்தஸ்வர ஆஞ்சநேயர்: வான்முட்டி பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி, அவரது அருகில் சிலைவடிவிலும் அருள் செய்கிறாள். ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. இதன் காரணமாக இந்த பெயர் ஏற்பட்டது. மேலும் ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலைமீது தூக்கி வைத்துள்ளார்.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து இன்னல்கள் நீங்கியதாக கல்வெட்டு உள்ளது.  பிப்பல மகிரிஷி பாடிய ஸ்லோகம் இக்கோயில் வழிபாட்டு நேரங்களில் சொல்லப்படுகிறது. பலருக்கும் பலவிதமான பலன்களை அள்ளித்தந்த பெருமாள் கோயில்.

சரபோஜி மன்னர் கண்ட காட்சி: கோழிகுத்தி வான  முட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட சரபோஜி மகாராஜா, இங்குவந்து மனதார வழிபட்டார். பகவானே! எனக்கு யுத்ததோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டார். பிப்பிலர்க்கு அருளியதுபோல் (வானளாவிய காட்சி) சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார். ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியொன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர், தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார். சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து, கோயில் எழுப்பி பூஜை செய்தார். விஸ்வரூப பெருமாள் என்பதால் வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார்.

மகேந்திரவர்மன் உள்ளிட்ட பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7-ஆம் நூற்றாண்டு, 10-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இவ்வளவு பழமைவாய்ந்த கோயில் 2004-ஆம் ஆண்டு நிலவரப்படி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. அதன் பின் சேவார்த்திகள், ஊர்மக்கள், ஆன்மிக அன்பர்கள் ஒத்துழைப்புடன் மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, வைணவ ஆகம விதிப்படி சுற்றுப்பெருமதில்களுடன் கோயில் அமைத்து, பெருமாளின் உத்தரவுப்படி 11-7-2007 ஆம் வருடம் குடமுழுக்கு விழா கண்டு, அன்று முதல் இன்றுவரை முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின்கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகிறது. முன்னொரு காலத்தில் குடகுமலைச்சாரலில் நிர்மலன் என்ற அரசன் வாழ்ந்தான். அவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை, அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது, முனிவர் ஒருவர் வீணை மீட்டி மிகவும் இனிமையாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் மன்னன் தன் நோய் பற்றி வருந்தி முறை யிட்டான். இதனைக்கேட்ட முனிவர் மன்னனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, அதை தினமும் ஜெபிக்கும்படி கூறினார்.முனிவர் கூறியபடி மன்னனும் அந்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது.""நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் (சிவன்) உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அங்கேயே தங்கிவிடு,''என்றது. அதன்படி, மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது. அந்த மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார்.மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் "கோடிஹத்தி' என அழைக்கப்பட்டது. "கோடிஹத்தி' என்றால் "சகல பாவமும்நீங்குமிடம்' என்று பொருள். இதுவே, காலப்போக்கில் மருவி "கோழிகுத்தி' ஆனது.  இதன் பின் மன்னன் பெருமாள்  பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். "பிப்பல மகரிஷி' என மன்னனை மக்கள் அழைத்தனர். பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை "பிப்பல மகரிஷி தீர்த்தம்' என அழைக்கிறார்கள்.

Maha Maya Sarva Sakthi Amman
தஞ்சை மாவட்டம், மயிலாடு‌துறை வட்டம், குத்தாலம் அருகில் உள்ள ‌சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ‌ழங்கும் அருள்மிகு மகா முத்துமாரியம்மன் தல வரலாற்றில் தனிபுதுமை

1986ம் வருடம் என் வயலில் மிளகாய் வைத்து பயிர் செய்து வந்‌தேன். தினம் 50 ‌பெண்கள் வேலை செய்வார்கள். அந்த வயலில் அமைந்திருந்த ஒர் வேப்பமரமும் அதனடியில் ஒர் புற்றும் இருந்தது. அவ்விடம் வரும் பெண்களில் யாருக்காவது ஒருவர் மேல் சாமி வந்து ஆடி அந்த இடத்தில் கோயில் கட்ட சொல்வார்கள். இது தினமும் நடக்கும் வாடிக்கையாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் நான் கடவுளை நம்ப மறுத்தவன். 1976-ம் ஆண்டு தஞ்சையில் உள்ள திரு. பேச்சிமுத்து சுவாமி அவர்களிடம் அருள்வாக்கு கேட்க எனது தம்பி திரு. தட்சிணமுர்த்தி என்னை அழைத்துச் ‌சென்றார். அவர் கூறும் ‌போது ” உன்னுடைய வயலில் ஒர் வேப்பமரமும் அதனடியில் புற்றும் இருக்கிறது. அந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்ட ‌கேட்டு அம்பாள் வந்திருப்பதாக கூறி அவளுக்கு ஒர் கல் நிறுத்தி வணங்கி வந்தால் ‌வேறு தெய்வம் இல்லை” என்று கூறி இருந்தார்.

ஒர் முறை கை‌ரேகை பார்ப்பவர் ” நீங்கள் எவ்வளவுதான் சாமியை பற்றி மறுத்து ‌பேசினாலும் நீங்களே ஒரு கும்பாபிசேகம் செய்வீர்கள்” என்று அடித்துக் கூறினார். இன்று ஒர் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் அன்று பங்கு பெறுகின்றனர். அம்பாள் இயற்கையாக ‌- சுயம்புவாக தேன்றிய இடம் இது. – ஆடியார் சண்முகனார்

சுசிலா என்கிற ஹரிஐனப் ‌பெண்ணின் ஆ‌வேசம் ஓர் நாள் படிக்காத அந்த அம்மாள் சாமி ஆடி ”அந்த வருடம் அவனுக்கு மிளகாய் விற்பனையில் அதிக வருமானம் கொடுத்‌தேன், நான் இப்படி அள்ளியள்ளி கொடுக்கும் போது எனக்கு ஒரு விளக்‌கேற்ற பயப்படுகிறான் என்று சாமி ஆடினாள்.

இதை கேள்விப்பட்ட நான் அந்த வேப்பமரம் நடு வயலில் இருப்பதால் யாரும் அவ்விடம் வந்து வணங்க மாட்டார்கள் என்று கருதி வேண்டுமானால் சாலையோரம் சின்ன கோயிலாகக் கட்டி விட்டல் போவோராவது சாமி கும்பிடுவார்கள் என்று வெளியல் ஒருவரிடம் கூறி‌னேன். மறுநாள் அந்த அம்மாள் ”என்னை கி‌ழக்கே ‌கொண்டு போகலாமா, மேற்கே ‌‌கொண்டு போகலாமா என்று வயல்காரன் நினைக்கிறான். எனக்கு இந்த இடம்தான் ‌வேண்டும் என்று அந்த இடத்தைச் சுற்றி ஒடி வந்ததாக கூறினார்கள். பிறகு 200 கல்லை கொண்டு விளக்கு ஏற்ற சிறிய மண்டபமாக கட்ட‌‌யோசித்தேன். மறுநாள் அந்த ‌பெண் சாமியாடி ”நான் அவனுக்கு லட்சம் லட்சமாக வினளவிக்கிறேன், எனக்கு கோயில் கட்டி அபிசேகம் செய்தால் பால் பொங்குவது போல் குடும்பம் சுபிட்சத்தால் ‌‌பொங்கும்” என்று கூறினார். கோவில் கட்ட வசூலுக்கு செல்ல வெட்கப்பட்டு என் ‌பொருளாதாரத்துக்கேற்ப 5 அடிக்கு, 5 அடி என்ற கணக்கில் ஓர் சிறிய கோயிலாக கட்டினேன்.மகன் உருவில் மகமாயி ஆடினாள் கோயில் திருப்பணியில் ஓர் ‌கொத்தனார், ஓர் சித்தாள், நான் ஆக மூன்று ‌பேர் மட்டும் கட்டுவோம். என் மகன் மகாலிங்கம் 17 வயதுடையவன்.ஒரு நாள் எனக்கு காசு கொண்டு வந்து ‌கொடுத்துவிட்டு கோயில் கட்டுமிடத்தில் நின்று ‌கொண்டிருந்தவன் திடி‌‌ரென்று சாமி ஆடினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை! ”நான் தஞ்சாவூர் மகமாயி 20 வருடமாக இந்த புற்றை ஸ்தாபிதமாக்கிக்‌‌கொண்டு இருந்து வருகிறேன். நான் ‌வெளிவர வேண்டிய நேரம் வந்து விட்டது. நானே இந்த திருக்கோயிலை உருவாக்கி மக்களுடைய குறைகளை போக்குவேன்.” என்று கூறி பாம்பு போல் ‌நெளிந்து நெளிந்து சுமார் 2 மணி நேரம் ஆடினான். ஆனால், அவனுடைய பழக்கத்திற்கும் அன்று ஆடும் ‌போது பேசும் பேச்சுக்கும் சம்மந்தா சம்மந்தம் இல்லமால்ஓர் ஞான விளக்கமாக‌வே தேன்றியது. உண்மையில் அங்கு கூடும் கூட்டத்தில் சமபாகம் வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்தான்! நான் உள்பட!

அம்பாளின் சக்தி வெளிபடுதல் ஓரு நாள் பையன் மீது சாமி ஆவாகனம் ஆகி ஆடிக்கொண்டு இருந்த போது சேண்டிருப்பு தெருவைச் சேர்ந்த சிலர் சந்துரு என்பவரை கேள்வி கேட்க சொல்லி அ‌ழைத்து வந்திருந்தார்கள். அவர் கிண்டலாக சில கேள்விகளை கேட்டபொழுது என்னிடம் யாரும் விளையாடாதிர்கள், தவறு செய்தால் முறித்துவிடுவேன் என்று எச்சரித்தது. எல்லோரும் இதை கேட்டு சிரித்து விட்டார்கள். ஆனால் சிரித்து ஓய்வதற்குள் கேள்வி கேட்டவர் அடிப்பட்ட பாம்பு துடிப்பது போல் துடித்து ஒரு முறுக்கு முறுக்கி மேலெ‌ழுந்து பக்கத்திலிருந்த பள்ளத்தில் விழுந்து பேச்சுமுச்சற்று கிடந்தார். இதை கண்ட அனைவரும் அந்த இடத்தை விட்டு ஒடி விட்‌ டோம். பிறகு எங்களில் ஓருவரை கூப்பிட்டு அவன் நெற்றியில் விபூதி இடுமாறு விபூதி ‌ கொடுத்தது. இட்டவுடன் அவன் தூங்கி எழுந்தவன் போன்று உடம்பை தடவிக் ‌‌கொண்டு எ‌ழுந்து வந்தான். அன்று முதல் இன்று வர‌ை யாராவது கோயில் சாமியை கிண்டல் செய்தால் அவர்கள் முறிக்கப்படுவது உலகில் எங்கும் காணாத நிக‌ழ்ச்சி. ‌பேய்பிடித்தவர்கள் இங்கு வந்தவுடன் தானாக ஆடி விபரம் கூறுவதும், விபூதி கொடுத்தவுடன் அவர்கள் அதன் பிடியில் இருந்து விடுபடுவதும் பத்து நிமிடங்களில் முடிந்து விடும். அம்பாள் தன் விபூதியாலேயே எத்தனையே ‌பேர்களை பில்லி சூன்யங்களில் இருந்து விடுபட வைக்கிறாள். இதற்காக எந்த கட்டணமோ, அன்பளிப்போ வாங்கக்கூடாது என்பது அம்பாளின் கண்டிப்பான உத்தரவு!

அம்பாள் அடியாருக்கு காட்சியளித்தல் ஒரு நாள் இரவு என் மகனுக்கு உடல் நலமில்லாமல் கண்கள் நிலையாக நின்று இறந்து வி்ட்டவன் போல் தோன்றினான். வீட்டிலிருந்த அனைவரும் அழுதுக் ‌‌கொண்டிருந்தார்கள். நான் மிக்க வேதனையுடன் எங்கள் வீட்டில் ஸ்தாபிதம் ‌செய்வதாற்காக வைத்திருந்த அம்மன் சிலையை கட்டிப் பிடித்து கொண்டு வாயில் வந்ததை‌யெல்லாம் ‌சொல்லி வைதேன்! உடனே எனக்கு அம்பாளின் சுய உருவம் ‌தெரிந்தது ” நான் உன் மகனை காப்பாற்றித் தருகி‌றேன் நீ நிம்மதியாக தூங்கு” என்று கூறியது. சிறிது ‌நேரத்தில் அவன் உடம்பில் அசைவு தெரிந்தது. ஆடியார் அருள் பெற்ற அற்புதம். மறுநாள் முதல் நான் ஏதோ ஒரு சக்தியால் கட்டுண்டவன் ‌போல் இருந்தேன். சிறிது நாள் சென்றவுடன் அருள்வாக்கு சொல்லும் அனுக்கிரகத்தைப் பெற்றேன்! இப்பொழுதும் ‌தேவைப்பட்டால் யாருக்காவது சொல்வதுண்டு. அம்பாளின் விளக்கப்படி ” தெய்வம் அருபமானது, அது யாரை கருவியாகப் பயன்படுத்த வேண்டுமோ அவனை பயன்படுத்தும். அவன் இறந்துவிட்டால் அவன் உடல் அழிந்துவிடும். ஆத்மா வேறு இடத்தில் ஐக்கியமாகி விடும். அவன் படத்தை மாட்டி வழிப்பட்டால் எந்தப் பலனும் கிடையாது. ” என்று விளக்கியது.

காவிரியில் விழுந்த தாலி குத்தாலம் சர்மான்ய ‌தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவரின் தாயார் காவிரியில் குளிக்கும்போது மாங்கல்யம் தண்ணீரில் விழுந்து விட்டது. அவர்கள் கோயிலில் வந்து அம்பாளிடம் கேட்டப்‌பொழுது அவள் குளித்த இடத்திலிருந்து நான்கடி கிழக்கே கிடக்கிறது என்றாள். அவர்களும் அதன் படி ‌சென்று பார்க்கும் பொழுது முதல் கை மணலிலேயே மாங்கல்யம் கிடைத்தது.

அம்பாள் வா‌ழ்த்திய அதிசய திருமணம் கடலூர் வெங்கடகப்பன் என்றவர் வீட்டுகல்யாணம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் கல்யாணத்துக்கு இரண்டு வாரம் முன்பாக மாங்கல்யம் ‌கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தி அர்ச்சனை செய்து அம்மாவே வந்து கல்யாணத்தை வாழ்த்தி அருள வேண்டு‌மென்று வேண்டினார்கள். அம்மாவும் வருவதாக வாக்களித்தாள் வருவதனால் எந்த உருவில் வருவாய் என்று கேட்க, நீ ஏற்றுக் ‌கொள்வதனால் எச்சிலை தின்னும் கன்றாக வருவேன் என்றாள். அவர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வோம் என்று வாக்களித்ததோடு, எல்லாக்கன்றும் இலையை தின்னும் போது, நீதான் அந்த கன்று என்று எப்படி நாங்கள் தெரிந்துக் கொள்ள முடியும் என்றனர். அதற்கு மணப்பந்தல் வரை வந்து ஆசிர்வதிப்பதாக கூறியனுப்பியது. ‌ சொல்லியபடி அன்று காலை திருமண ‌நேரத்தில் ஓரு கன்று வாசலில் வந்து நின்றது. அவர்கள் வாசல் கதவை திறந்து விட்டு அமைதியாக கவனித்தனர். உட‌ னே அந்த கன்று உள்ளே வந்து நேராக மணவரை வரை சென்று நின்றது. அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு லட்டு, பழம் கெடுத்து கற்பூறம் செய்தனர், அதன் பிறகு அது தானாக திரும்பிச்சென்று விட்டது.

காளிதாஸின் அருள் மொழிக்கு விளக்கம். காளிதாஸ் என்பவர், ஒர் பொண்ணுக்கு க‌ணவனை பிரிந்து வாழும் நீ இன்னும் ஒரு வருடத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ்வாய் என்று அருள் கூறினார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால் அவள் நான் சொல்படி நடக்கவில்லை என்று வருத்தப்படுகிறாள். அம்மா இதற்கு காரணம் என்ன என்று கேட்க, ராமன் கால்பட்டுத்தான் விமோசனம் கிடைக்கு‌மென்று இருக்க, அந்தக்கல்லைக் கொண்டு ராமன் காலடியில் போட்டு ராமா இதில் ஏறி நில், உட‌ னே விமோசனம் கிடைக்க வேண்டுமென்றால் முடியாது. ஆது போல் நேரம் வரும் போது நடக்கும். இருவர் மனமும் ஓத்துவரும் சூழ்நிலையை உருவாக்கி நானே அனுப்பிவைப்பேனென்றாள். திடீரென்று ஒரு நாள், யார் அந்தப் ‌ பெண்னை அடித்து துன்புறுத்தி தாயார் வீட்டுக்கு துரத்தி விட்டாளோ, அ‌தே நாத்தனார் உன் குடும்பத்தை நீ‌யே நடத்து, தனியாக குடும்பம் நடத்த ஏற்பாடு ‌செய்துத் தருகி‌றேன் என்று கடிதம் போட்டு, இப்பொழுது அந்தப் பெண் காயத்திரி என்பவள் ‌ கொடுங்கையூரில் தன் கணவனுடன் மனமொன்றி வசித்து வருகிறாள். கும்பகோணம் நீலகண்டன்என்பவர் மனைவி, கணவனை விட்டு பிரிந்து சுமார் 14 வருடம் வாழ்ந்த பின் அம்பளை வேண்டியதால் உட‌னே சேர்ந்து வாழும் அற்புதத்தை அம்மா ‌செய்தாள்.

ஊமை பேசிய அதிசியம் குத்தாலத்திற்கு அருகில் உள்ள ராஜ‌கோபாலபுரத்தில் உள்ள ஒரு அம்மையார் கோவிலுக்கு வந்து தன்னுடைய 8 வயது ‌பெண் பிறவியிலிருந்து ஊமையாய் இருக்கிறாள். அவளுக்கு பேசும் சக்தி வரவேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுது வேண்டினார். அந்த குழந்தை நிலைக்கண்டு அம்மா அருள் பாவித்து 15 நாட்களுக்கு அங்க பிரதட்சணம் ‌செய்தால் பேச்சு வரும் என்று கூறியருளினாள். அந்த அம்மாவும் அங்ஙனமே தினம் காலையில் அம்பளை வேண்டி அங்க பிரதட்சணம் செய்தார்கள். அதன் முடிவில் திரு. மகாலிங்கத்தின் மீது அருள் வந்து ஊமை பெண்ணின் நாவில் விபூதியை தடவி அம்மா என்று கூறச் ‌சொல்லவும் அந்த பெண்ணும் அம்மா! அம்மா! என்று ‌பேசியது. அதன் பிறகு படிப்படியாக பேசும் திறமை கூடி தற்சமயம் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறாள். இது‌போல் பலர் பேசும் திறமை ‌பெற்றுள்ள அதிசயம் நடந்துள்ளது.

அம்பாள் கொடுத்த கால்கள் முள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பழனிசாமி என்பவரின் 10 வயது பெண் தனக்கு ஏற்பட்ட நோய் காரணமாய் இரண்டு காலும் பாதிக்கப்பட்டு நடக்கமுடியவில்லை.எழுந்து நின்றாள் கீழே விழந்து விடுவாள். அவளை மருத்துவரிடம் காட்டி இரண்டு முறை அறுவை சிகிக்சை செய்தும் கால் நடக்கமுடியவில்லை. அவளுடைய தந்தை அந்தப் பெண்னை கோவிலுக்கு தூக்கி வந்து குறை நீங்க வேண்டினார். அவர் குரலுக்கு அம்மா மனமிரங்கி 10 நாட்கள் கோவிலை வலம் வந்தால் காலை சுகமாக்கித் தருவதாய் அம்மா அருளியது. தினமும் அந்தப் பெண் தத்தித்தத்தி ‌கோவிலை வலம் வந்தாள். அப்படி வரும் பொழுது 3 நாளிலே அவள் நடக்கும் சக்தியைப் பெற்று தன்னுடைய வீட்டிலிருந்து கோவிலுக்கு (2 கி.மி) நடந்தே வந்தாள். இந்த அதிசயத்தைக் கண்ணுற்ற பலர் அம்பாளின் அருளை போற்றி வணங்கினார்கள்

தடைப்பட்ட திருமணம் நடந்தது! மயிலாடுதுறையை சேர்ந்த அன்பர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்கு வரன் தேடி வந்தார். ஆனால் எந்த வரனும் கைகூடவில்லை. மிகவும் பிரபலமான உள்ள அருள் ‌மேடையி்ல் கூறிய படியும் நடக்கவில்லை. சோதிடரைக் கேட்டால் இன்னும் முன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் நடை ‌பெறும் என்று கூறி விட்டார். மிகவும் மனம் சோர்வடைந்த அவர் இங்கு வந்து அம்பாளை வேண்டி திருமணத்தை முடித்துத் தரும்படி பிராத்தித்தார். அம்பாளும் அவர் கோரிக்கைக்கு மனமிரங்கி கோயிலுக்கு 7 வாரம் வந்து விளக்கு போட்டு வந்தால் கல்யாணம் முடியும் என்று அருளியது. அவர்களும் அவ்விதமே செய்தனர். அதிசயம் என்னவென்றால் 3வது வாரத்தில் திருமணம் முடிந்துவிட்டது. இது போல் அனேக திருமணங்கள் இங்கு வந்து வேண்டிய பிறகு முடிந்துள்ளது.

அருள்மிகு மகா முத்துமாரியம்மன் ஆலயம், 52 வில்லியநல்லுர், குத்தாலம், சேண்டிருப்பு கிராமம். மயிலாடு‌துறை வட்டம், நாகை மாவட்டம், தமி‌ழ் நாடு, இந்தியா. பின் கேடு – 609801. ‌கோயில் ‌போன் நம்பர் : 91 – 04364 – 234351 Mr. Mahalingam. Cell : 919443980608

Contact Us

Give a call to 91 92453 25192 or email krishnan1977@gmail.com if you want to include your temple at your place in this website. Feel free to contact me for the details of the temples in and around Mayiladuthurai, Kumbakonam, Navagraha temples.., :)